×

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தேவதானப்பட்டி, மே 8: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பிரதான சாலையாக தேவதானப்பட்டி காட்ரோடு சாலை உள்ளது. தற்போது விடுமுறை என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் கொடைக்கானலுக்கு இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு டம்டம்பாறை அருகே சாலை ஓரத்தில் இருந்து மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.

இதனால் போக்குவரத்து பாதித்தது. மரம் விழுந்து சாலையின் குறுக்கே கிடக்கும் போது கொடைக்கானலில் இருந்து கீழே இறங்கிய கேரளா சுற்றுலா வாகனம் விழுந்து கிடந்த மரத்தின் சிறிய இடைவெளியில் சென்றுவிடலாம் என நினைத்து வந்த பஸ் இடைவெளியில் சிக்கிக் கொண்டது. வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தேவதானப்பட்டி போலீசார் மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் பத்திரமாக அந்த இடைவெளியில் சிக்கிய சுற்றுலா பஸ்சை மீட்டனர்.இதனால் காட்ரோடு டம்டம் பாறை-கொடைக்கானல் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

The post சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Devadhanapatti ,Devadhanapatti Khatrodu road ,Kodaikanal ,Dindigul district ,Dinakaran ,
× RELATED ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்...