×

இஞ்சி விலை உயர்வு

 

போடி, மே 8: தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் இஞ்சி சாகுபடியை செய்து வருகின்றனர். இங்கு விளையும் இஞ்சியினை ஒட்டு மொத்தமாக கொள்முதல் செய்து, மேட்டுப்பாளையத்தில் உள்ள ஏலச்சந்தையில் சேர்க்கப்படுகிறது. இந்த இஞ்சியினை வியாபாரிகள் ஏலம் எடுத்து, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். வழக்கம்போல், கோடை காலத்தில் வரத்து குறைவால், இஞ்சி விலை அதிகமாக இருக்கும். தற்போது கடந்த ஒரு மாதமாக இஞ்சியின் விலை படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ ரூ.200 முதல் 250 ஆக விற்பனையாகிறது. நாளுக்கு நாள் விலை அதிகரித்து கொண்டே போவதால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

The post இஞ்சி விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Tamil Nadu ,Ooty ,Kodaikanal ,Kothagiri ,Mettupalayam ,
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்