காரைக்குடி, மே 8: காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் வெங்கம் ரமணன் வரவேற்றார். கல்வி குழும ஆலோசகர், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், கல்விக்கு இணையான முக்கியத்துவத்தை பிறதுறை சார்ந்த திறன்களை வளர்க்கவும் கவனம் செலுத்த வேண்டும். சாதனை என்பது அனைவரும் அடையக் கூடியது. அதற்கு உரிய முயற்சியும் பயிற்சியும் மிகமிக அவசியம். மாணவர்களை மார்க்குகாக மட்டும் உருவாக்குவது எங்களின் நோக்கம் அல்ல அதையும் தாண்டி பிற துறைகளில் சிறந்தவர்களாக உருவாக்கி வருகிறோம்.
மாணவர்கள் பிறதுறைகளில் முன்னேற ஆசிரியர்கள், பெற்றோர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளதை மட்டும் கற்றுக் கொடுக்க கூடாது. உலகத்தில் உள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டு அதனை கற்றுத்தர வேண்டும். மாணவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும். குழந்தைகளின் சிந்தனையை தூண்ட அவர்களின் அறிவை வளர்க்க ஆசிரியர்கள் தாமாக வலிய சென்று அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் ஏதாவது ஒரு போட்டிகளில் தங்களை ஈடுபடுத்தி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். பயிற்சி ஆசிரியர் வெங்கலட்சுமி நன்றி கூறினார்.
The post தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.
