×

பாம்பாலம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

 

திருவாடானை,மே 8: திருவாடானை அருகே பெரிய கீரமங்கலத்தில் பாம்பாலம்மன்கோயில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு கலை நிகழ்ச்சிகள் வாணவேடிக்கை நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று கோயில் முன்பாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். கோயில் முன்பாக பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் காவடி எடுத்து வந்தும், அலகு குத்தியும் பூக்குழி இறங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரிய கீரமங்கல கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post பாம்பாலம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Pookkuzhi Festival ,Pambalamman Temple ,Thiruvadanai ,Pambalamman temple painting festival ,Periya Keeramangalam ,
× RELATED திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பேஸ்...