×

மதுரை மாநகராட்சியில் மேற்கு மண்டல குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது

 

மதுரை, மே 8: மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல பகுதிகளில் வசிப்போருக்கான குறைதீர் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நாளை (மே 9) திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, பழங்காநத்தம், கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு,

வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மீனாட்சி நகர் அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகர், பசுமலை, திருநகர், சௌபாக்யாநகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம், சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், பாலாஜி நகர், அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள குறைகள், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான மனுக்களை அளிக்கலம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை மாநகராட்சியில் மேற்கு மண்டல குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : West Zone Grievance Meeting ,Madurai Corporation ,Madurai ,West ,Zone ,Mayor ,Indrani Ponvasant ,Dinakaran ,
× RELATED மழை தண்ணீர் தேங்கும் ரயில்வே சுரங்கப்பாதை ஆய்வு