×

மின்வாரிய பெண்கள் மாநில மாநாடு

 

கோவை, மே 8: கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் 10வது மாநில மாநாடு நேற்று நடந்தது. மத்திய அமைப்பு பொதுச்செயலாளர் ராஜேந்திரன், கன்வீனர் தனலட்சுமி, மத்திய அமைப்பு தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அகில இந்திய செயலாளர் தீபா கோ.ராஜன் துவக்க உரையாற்றினார். இதில், மண்டல செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில இணை செயலாளர் மணிகண்டன், மாநில துணை தலைவர் நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில், அனைத்து வட்டங்களிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விசாகா கமிட்டியை அமைக்கவேண்டும். பெண்கள் பணியாற்றும் இடங்களில் குழந்தைகள் காப்பகம், ஓய்வறை அமைக்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். மின்வாரியத்தில் பகுதிநேர துப்புரவு பணியாளர்களை அனைத்து காலிப்பணியிடங்களில் நிரப்பி முழு நேர ஊழியராக நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.

The post மின்வாரிய பெண்கள் மாநில மாநாடு appeared first on Dinakaran.

Tags : Electropical Women State Conference ,Govai ,Tamil Nadu Electric-Working Women Coordinating Committee ,Singanallur Mazakhalipalayam ,Electropical Women's State Conference ,Dinakaran ,
× RELATED கோவை பாரதியார் பல்கலை. மாணவன் விடுதியில் தற்கொலை