×

முதல்வர் டிவிட் திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் தொடரும்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திமுக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது.

தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம். திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post முதல்வர் டிவிட் திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் தொடரும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,CM G.K. ,Twitter ,Stalin ,Djagam Government ,Iran ,Principal ,David Drapidhi ,
× RELATED அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை...