×

பாஜ.வை கர்நாடக மக்கள் நிராகரிப்பார்கள்: ப.சிதம்பரம் பேட்டி

புதுடெல்லி: “சமூகத்தை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டங்களை செயல்படுத்தும் பாஜ.வை மக்கள் நிராகரிப்பார்கள்,” என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தல் குறித்து முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில், “ஜனநாயகத்தை காப்பாற்ற, கர்நாடகத்தின் எதிர்காலத்துக்காக இந்த தேர்தலில் பாஜ வெற்றி பெறுவது தடுக்கப்பட வேண்டும். சமூகத்தை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டங்களை செயல்படுத்துவதாக பாஜ உறுதி அளித்துள்ளது. வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இவற்றை செயல்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட அனுபவம் இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “கர்நாடக மக்கள் இந்த பாடத்தை கற்று கொண்டு, இதனை செயல்படுத்துவதாக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்த பாஜ.வை நிராகரிப்பார்கள்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என்று கூறவில்லை. அது போன்ற வெறுப்பை பரப்பும், தூண்டும் அமைப்புகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. தேர்தலில் எதிர்ப்பை, குற்றச்சாட்டை வலுவாக எடுத்து கூற கடினமான வார்த்தைகளை பயன்படுத்துவது வார்த்தை துஷ்பிரயோகம் ஆகாது,” என்று கூறினார்.

The post பாஜ.வை கர்நாடக மக்கள் நிராகரிப்பார்கள்: ப.சிதம்பரம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Baja ,Karnataka ,p. ,Chidambaram ,New Delhi ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானில் பரபரப்பு; சுயேச்சை, உதிரி...