×

கல்லாறு தூரிப்பாலம் அருகே எச்சரிக்கையை மீறி காட்டாற்றில் குழந்தைகளுடன் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் – ஊட்டி செல்லும் சாலையில் தூரிப்பாலம் அருகே கல்லாறு எனப்படும் காட்டாறு ஓடி வருகிறது. குன்னூரில் இருந்து வெளியேறும் மழைநீர் இந்த ஆற்றின் வழியாகச்சென்று பவானியில் கலக்கிறது. இங்கு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் தற்போது குளிக்கவோ, துவைக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குடும்பத்துடன் இங்கு குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.கோவை எஸ்பி பத்ரி நாராயணன் அண்மையில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு பற்றி நன்கு பயிற்சி பெற்ற 10-க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய லைப் கார்ட்ஸ் என்ற பிரிவினை மேட்டுப்பாளையம் காவல்துறையில் உருவாக்கினார்.

அக்குழுவினரும் பவானி ஆறு மற்றும் கல்லாறு பகுதிகளில் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு எச்சரித்து வருகிறன்றனர்.இருந்தும் ஒரு சிலர் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி ஆற்றில் குளிக்க செல்கின்றனர். இதனால் பலர் தங்களது இன்னுயிரை இழந்தும் வருகின்றனர். அத்துமீறும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுத்து உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கல்லாறு தூரிப்பாலம் அருகே எச்சரிக்கையை மீறி காட்டாற்றில் குழந்தைகளுடன் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kallaru bridge ,Mettupalayam ,Ooty road ,Kallar ,Dhuripalam ,Coonoor ,Kallar Bridge ,Dinakaran ,
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது