×

கறம்பக்குடி அருகே எம்.தெற்கு தெரு ஊராட்சியில் அரசு தொடக்க பள்ளியில் புதிய கட்டிடம் கட்டும் பணி மும்முரம்: அரசுக்கு பொதுமக்கள் நன்றி

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே எம்.தெற்கு தெரு ஊராட்சியில் அரசு தொடக்க பள்ளியில் புதிய கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் எம்.தெற்கு தெரு ஊராட்சியில் கடந்த ஆட்சியில் நடைபெறாத பணிகள் மூலம் வளர்ச்சி முழுமையாக பாதிக்கபட்டு இருந்தது.அதன் பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் எம்.தெற்கு தெரு ஊராட்சி பொதுமக்களின் நலன் கருதி ஊராட்சியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினர் வேண்டுகோளை ஏற்று பல்வேறு வளர்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வகையில் அதன் ஒரு பகுதியாக 1956ம் ஆண்டு எம்.தெற்கு தெரு கிராமத்தில் இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்க பள்ளி பழுதடைந்ததன் காரணமாக பொதுமக்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று அவர்களின் நலன் கருதி மாரியம்மன் கோயில் அருகே ரூ.15 லட்சம் மதிப்பில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் போதும்பொண்ணு குபேந்திரன் சீரிய முயற்சியால், அரசு தொடக்க பள்ளி கட்டிட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாணவ, மாணவிகளின் நலன் கருதி உடனடியாக அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்து பணிகள் நடைபெறுவதற்கு உதவி புரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அரசுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

 

The post கறம்பக்குடி அருகே எம்.தெற்கு தெரு ஊராட்சியில் அரசு தொடக்க பள்ளியில் புதிய கட்டிடம் கட்டும் பணி மும்முரம்: அரசுக்கு பொதுமக்கள் நன்றி appeared first on Dinakaran.

Tags : primary ,M. Thegku street panchayat ,Karambakudi ,Government Primary School ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...