×

கடந்த ஓராண்டில் மட்டும் 25 உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணி தீவிரம்: அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்

சென்னை, மே 7: திமுக அரசு பதவி ஏற்ற பிறகு நெடுஞ்சாலைத்துறை மூலம் 25 உயர் மட்ட பாலங்கள் கட்டும் பணி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. திமுக அரசு பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் முடிந்து, 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைத்து வரும் தமிழக அரசு, நெடுஞ்சாலைத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் செய்யாத பல சாதனைகளை 2 ஆண்டில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் செய்து வருகிறது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அமைச்சர் பாராட்டையும் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, கடந்த ஓராண்டில் செய்யப்பட்டு வரும் சாதனைகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளதாவது:

சாலைப் பணிகள்
n ரூ.2311.15 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 832.09 கி.மீ நீளமுள்ள சாலைப் பணிகள் மற்றும் 474 பாலம்/சிறுபாலப் பணிகள்.
n ரூ.346.53 கோடி மதிப்பில் 423.67 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் சாலை ஓடுதள பரப்பினை மேம்படுத்தும் பணிகள்.
n ரூ.131.19 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 373 சாலைப் பாதுகாப்பு பணிகள் மற்றும் ரூ.56.95 கோடி மதிப்பில் சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 66 சாலைப் பாதுகாப்புப் பணிகள்
n ரூ.66.99 கோடி மதிப்பில் 48.62 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி/ ஊராட்சி ஒன்றிய சாலைகள் தரம் உயர்வு.
உயர்மட்ட பாலங்கள்
n நபார்டு கடனுதவி திட்டம் மற்றும் மாநில நிதியின் கீழ், ₹98.97 கோடி மதிப்பில் 25 உயர் மட்ட பாலங்கள்.
n 123 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றும் பணிகள்
ரயில்வே பாலங்கள்
n ரூ.30.13 கோடி மதிப்பில் ஓமலுர்-மேச்சேரி ரயில் நிலையங்களுக்கிடையில் ரயில்வே மேம்பாலம். (கடவு எண்-18) ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக நிதி பணிகள்:
n ₹70.15 கோடி மதிப்பில் ஆண்டுத்திட்டத்தின் கீழ் சாலை மற்றும் பாலப் பணிகள் என பணிகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

The post கடந்த ஓராண்டில் மட்டும் 25 உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணி தீவிரம்: அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Minister A. Etb ,Velu ,Chennai ,Highway Department ,Dizhagam Government ,Pride ,Dinakaran ,
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...