×

கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 862 கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, மே 6: நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 862 கனஅடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவின் விவரங்கள்(மில்லி மீட்டரில்): நெடுங்கல் 34.6, கிருஷ்ணகிரி 17.6, ஓசூர் 10.3, கெலவரப்பள்ளி 10, பெணுகொண்டாபுரம் 9, போச்சம்பள்ளி 8.3, பாம்பாறு 7, ஊத்தங்கரை 4.6, பாரூர் 2.4, தேன்கனிக்கோட்டை 2, கேஆர்பி டேம் 2 என மொத்தம் 107.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 640 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 655 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து விநாடிக்கு 720 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 42.80 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு, நேற்று முன்தினம் 532 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 862 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 496 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 43.40 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

The post கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 862 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : KRP dam ,Krishnagiri ,Krishnagiri KRP Dam ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்