×

எறையூர் பச்சை வாழியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வானூர், மே 7: வானூர் தாலுகா எறையூர் நெமிலி கிராமத்தில் உள்ள மன்னாதீஸ்வரர் பச்சைவாழியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடந்தது. திருவக்கரை அருகே உள்ள பச்சைவாழியம்மன் கோயிலில் சித்திரை மாதத்தையொட்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக வாழுமுனி சாமிக்கு வடமாலை சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் வள்ளி தெய்வானை முருகன் திருக்கல்யாணம் நடந்தது. அதையடுத்து மாலை 6 மணிக்கு மூட்டப்பட்ட தீக்குண்டத்தில் அக்னி கரகம் இறங்க தொடர்ந்து பக்தர்கள் பக்திபரவசத்துடன் தீமிதித்தனர். இரவில் வாணவேடிக்கைகளுடன் சுவாமி வீதியுலா நடந்தது. பாதுகாப்பு பணிகளில் வானூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

The post எறையூர் பச்சை வாழியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Dimithi festival ,Pacha Vaziyamman Temple ,Eraiyur ,Vanur ,Dimithi ,Mannatheeswarar Pacchivazhiyamman temple ,Erayur Nemili ,Erayur Pacchivazhiyamman temple ,
× RELATED திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா