×

ஆன்லைனில் பெற்ற 63 விண்ணப்பத்துக்கு சிஎம்டிஏ 60 நாளில் திட்ட அனுமதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: சிஎம்டிஏ ஆன்லைன் போர்ட்டல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் 63 விண்ணப்பங்களுக்கு 60 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: சிஎம்டிஏவில், திட்ட அனுமதி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது முதல், திட்ட அனுமதி வழங்கும் வரை, முற்றிலுமாக இணைய வழியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிற துறைகளின் தடையின்மை சான்றுகளை பெறுவதற்கு ஏதுவாக சம்மந்தப்பட்ட துறைகளுடன் இணைய வழி மூலம் ஒருங்கிணைப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒற்றைச் சாளர மென்பொருள் கடந்த 2022ம் ஆண்டு, மே மாதம் முதல் இதுவரை இணையதளத்தில் திட்ட அனுமதி வழங்குவதில் 82% ஆக துரித வளர்ச்சி கண்டுள்ளது. சிஎம்டிஏ ஆன்லைன் போர்ட்டல் மூலம் பெறப்பட்ட 672 விண்ணப்பங்களில், 327 விண்ணப்பங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதில் கடந்த 2 மாதங்களில் மட்டும், 130 திட்ட அனுமதிகள் வழங்கப்பட்டது. சிஎம்டிஏ ஆன்லைன் போர்ட்டல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில், 63 விண்ணப்பங்களுக்கு, 60 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டது இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆன்லைனில் பெற்ற 63 விண்ணப்பத்துக்கு சிஎம்டிஏ 60 நாளில் திட்ட அனுமதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : CMDA ,Minister ,PK Shekharbabu ,Chennai ,
× RELATED ₹12 கோடியில் நவீனமயமாகிறது அம்பத்தூர்...