×

10.5% இட ஒதுக்கீடு உயிரை விட தயார்: ராமதாஸ் பரபரப்பு பேச்சு

திண்டிவனம்: ‘வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடுக்காக சாகும் வரை உண்ணாவிரம் இருந்து உயிரை விடவும் தயார்’ என ராமதாஸ் பேசினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் கூட்டு கூட்டம் நேற்று நடந்தது. பாமக தலைவர் அன்புமணி தலைமை வகித்து பேசுகையில், ‘10.5 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கு எத்தனை அவமானங்கள், போராட்டங்கள் நடத்தி அரசை கெஞ்சினோம். இதனை பெறுவதற்கு நமக்கு அதிகாரம் வேண்டும். வன்னியர் சங்க மாநாடு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் விரைவில் நடக்கும். சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டாம். 10.5 சதவீத இட ஒதுக்கீடு இக்கல்வி ஆண்டுக்குள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

இம்மாதத்துக்குள் இட ஒதுக்கீடு அளிக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையை ராமதாஸ் எடுப்பார். மதுவினால் சமூக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மதுவிடமிருந்து அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும்’ என்றார். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, ‘தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி பணம் கொடுக்காது. நீங்களும் செலவு செய்ய வேண்டாம். மக்களை நம்புங்கள். 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து என் உயிரையும் விட தயாராக உள்ளேன். தமிழ்நாட்டில் நாம் தமிழை வளர்க்க முன்வாரவிட்டால் யார் வளர்ப்பார்கள். தமிழை வளர்க்க ஆர்வம் காட்டாவிட்டால் நீங்கள் இங்கிலாந்தில் இருந்து வந்த வெள்ளைக்காரன் என்று சொல்லிவிடுவான்’ என்றார்.

The post 10.5% இட ஒதுக்கீடு உயிரை விட தயார்: ராமதாஸ் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ramdas' ,Tindivanam ,Vanniyars' ,Ramadas ,
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...