×

மாதவரம் தாலுகாவில் போலி ஆவணம் மூலம் ₹1 கோடி நில மோசடி: பெண் உள்பட 3 பேர் கைது

ஆவடி: அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் அருணா (48). இவருக்கு சொந்தமாக மாதவரம் அடுத்த கொரட்டூர், ஸ்ரீலட்சுமி அம்மன் நகர் பகுதியில் 1800 சதுர அடி நிலம் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வந்த அவர், தற்போது அண்ணாநகருக்கு வந்தார். அப்போது, தனக்கு சொந்தமான ₹1 கோடி மதிப்பிலான நிலத்தை ஆய்வு செய்தார். இதில், போலி ஆவணங்கள் மூலமாக லோகநாதன் என்பவரின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அருணா அதிர்ச்சியானார்.

உடனே ஆவடி காவல் ஆணையரகத்தில் இயங்கி வரும் சிறப்பு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் அருணா புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை அழைத்து விசாரித்தனர். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் ஒரு பெண் உள்பட 3 பேரை அழைத்து விசாரித்தனர். அவர்கள்தான் அருணாவின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் லோகநாதன் என்பவருக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து புழல் காவாங்கரை மகாவீர் தோட்டம் பகுதியை சேர்ந்த லலிதா (54), புத்தாகரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த ஹரிகோபால் (46), மாரிமுத்து (54) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மாதவரம் தாலுகாவில் போலி ஆவணம் மூலம் ₹1 கோடி நில மோசடி: பெண் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madhavaram taluk ,Avadi ,Aruna ,Annanagar East ,Koratur ,Madhavaram ,Srilakshmi Amman Nagar ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் லாரி எரிந்து நாசம்