×

சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்

வேலூர்: சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு நேற்று 2வது நாளாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமியின்போது லட்சக்கணக்காக பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். இதில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் முதல் திருவண்ணாமலைக்கு தமிழ்நாட்டின் பல்ேவறு பகுதிகளில் இருந்து 1,958 சிறப்பு பஸ்களும், 8 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. வேலூர் அரசு போக்குவரத்து கழக மண்டலத்தின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமார் 200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

வேலூரில் இருந்து 60 பஸ்கள், திருப்பத்தூரில் 40, ஆற்காடு 30, சோளிங்கர் 5, சென்னையில் இருந்து 50, தாம்பரம் 5, பெங்களூருவில் இருந்து 10 என மொத்தம் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து நேற்றும் 2வது நாளாக இந்த சிறப்பு பஸ்களின் மூலம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றனர். இன்று வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chitra Poornami ,Vellore ,Tiruvannamalai ,Chitra Pournami ,Tiruvannamalai Annamalaiyar ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?