×

மக்களை சாதி மத ரீதியாக பிரித்தது பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் பற்றி தெரியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற தலைப்பில் சாதனை மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களில் கீழ் ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஒரு லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பயன்கள் வழங்குதல் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் திறன் மேம்பாடு பயிற்சி பெற்று வேலை பெற்ற இளைஞர்களுக்கு கேடயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஆட்சி என்பதற்கான இலக்கணத்தை வகுத்து இந்தியாவுக்கே கலைஞர் வழிகாட்டினார். அனைத்து சோதனைகளையும் பழக வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் கலைஞர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். எனக்கு தெம்பும், தைரியம்மும் தந்தைபெரியார், அண்ணா, கலைஞர் கற்று கொடுத்தார்கள் என்று முதல்வர் கூறியுள்ளார்.

எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. மக்களை சாதி மத ரீதியாக பிரித்தது பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் பற்றி தெரியாது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேபவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. மக்களின் மகிழிச்சியும் புன்னகையுமே திராவிட மாடல் என்றால் என கேட்ப்பவர்களுக்கு இது தான் பதில் என்று முதல்வர் கூறியுள்ளார். மக்களை சாதியால் மதத்தால் அதிகாரத்தால் ஆணவத்தால் பிரித்து பார்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்று தெரியாது. இந்த ஆட்சியில் முகம் சனாதனம் அல்ல சமூகநீதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்னவென்று தெரியும். அனைத்து தரப்பினருக்கும் தேவையான உதவிகளை வழங்கி கைதூக்கி விடக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. ஏழை மக்களின் நலன் காக்கும் குடியிருப்பாக செயின்ட் ஜார்ஜ் கோட்டை மாற்றியுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகள், மாணவர்கள், பெண்கள், முதியோர் என அனைவரும் பயனடைந்துள்ளனர். அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை நோக்கி திமுக அரசு செயல்படுகிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் கைப்பேன் உதவித்தொகை கேட்டு கிடைக்காதவர்களுக்கு திமுக ஆட்சியில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களுக்கு எதாவது ஒரு வகையில் பலன் கிடைத்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் கோடிக்கணக்கான மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மக்களின் மகிழ்ச்சியை கான முடிகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post மக்களை சாதி மத ரீதியாக பிரித்தது பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் பற்றி தெரியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : dravidi ,G.K. Stalin ,Chennai ,Tamil Nadu Govt ,Kalivana ,Travidi ,CM ,B.C. ,
× RELATED அரசு எந்திரம் நன்றாக செயல்பட...