×

அமைச்சர் மெய்யநாதன் பேச்சு இல்லம் தேடிக் கல்வி மைய சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு பேரணி

கந்தர்வகோட்டை,மே6: கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையம் சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு பேரணி நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் இல்லம் தேடி கல்வி மையத்தின் சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களிடம் விழிப்புணர்வு பேரணியை பழைய கந்தர்வகோட்டை, மெய்குடிப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி முருகேசன், மங்கனூர் ஊராட்சி மன்ற தலைவி வசந்தா பழனியாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ், ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். வானவில் மன்ற மாவட்ட கருத்தாளர் முத்துக்குமார் கலந்து கொண்டு கோடைகாலத்தில் நடைபெறும் ஆயிரம் அறிவியல் திருவிழாவை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தார். இல்லம் தேடி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார்.

மாணவர் சேர்க்கை பேரணியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். அரசு பள்ளியில் செயல்படுத்தி வரும் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மாலை நேரத்தில் மாணவர்கள் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்புகளை சரி செய்யக்கூடிய பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகளில் கல்வி இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. காலை உணவு திட்டம், அரசு பள்ளியில் பயின்றால் 20% அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, உயர்கல்விகள் 7.5% இட ஒதுக்கீடு, பெண்களுக்கு இலவச உதவி தொகை, மாதந்தோறும் தேன்சிட்டு, ஊஞ்சல் சிற்றிதழ்கள், கண்ணொளி திட்டம், ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம், விலையில்லா வண்ண சீருடைகள், காலணிகள், விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவை அரசு பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் சேருங்கள் என்று பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக இல்லம் தேடிக் கல்வி மையமும், வானவில் மன்றமும் இணைந்து நடத்திய ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை வானவில் மன்ற கருத்தாளர்கள் வசந்தி, தெய்வீக செல்வி ஆகியோர் எளிய அறிவியல் பரிசோதனைகள் காகித மடிப்பு கலை உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு செய்து காட்டினார்.இந்நிகழ்வில் மங்கனூர் கூட்டுறவு சங்கத் தலைவர் பாண்டியன், தன்னார்வலர்கள் அஞ்சலி, வெள்ளையம்மாள், பவித்ரா லெட்சுமி,கனகா , பழைய கந்தர்வகோட்டை பள்ளி மேலாண்மை குழு தலைவி சங்கீதா, மக்கள் நல பணியாளர் அமுதா, ஊராட்சி செயலாளர் சக்திவேல், தன்னார்வலர்கள் ஷோபனா, வசந்தி, சரண்யா, மஹாலக்ஷ்மி மெய்குடிப்பட்டி தன்னார்வலர்கள் லாவண்யா, ரஞ்சனி, ரம்யா தேவி, விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் மெய்யநாதன் பேச்சு இல்லம் தேடிக் கல்வி மைய சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Minister ,Meyyanathan ,Gandharvakottai ,Gandharvakottai Union ,Meiyanathan ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...