×

சித்திரை மாதத்தையொட்டி தொண்டப்பாடி மாரியம்மன் வீதிஉலா

பாடாலூர், மே 5: பாடாலூர் அருகே சித்திரை மாதத்தை கிராமத்தில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தொண்டப்பாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தேங்காய், வாழைப்பழம் போன்ற அபிஷேக பொருட்கள் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொண்டப்பாடி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

The post சித்திரை மாதத்தையொட்டி தொண்டப்பாடி மாரியம்மன் வீதிஉலா appeared first on Dinakaran.

Tags : Thondapadi Mariyamman ,Chitrai month ,Padalur ,Mariyamman ,Chitrai Mathat ,Perambalur… ,
× RELATED ஆலத்தூரில் 3வது நாளாக ஜமாபந்தி