×

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை,மே6: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கணினி ஆப்ரேட்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஊராடசி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். அலுவலர்களுக்கு பணி அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஓட்டனர் சங்க தலைவர் அன்பு, வட்டார தலைவர் ரஜினி உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கலையழகன் நன்றி கூறினார்.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அக்னீஸ்வரி காளியம்மன் கோயிலில் பால்குட விழா

மயிலாடுதுறை,மே6: சித்ரா பவுர்ணமி முன்னிட்டு மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடி  அக்னீஸ்வரி காளியம்மன் கோயிலில் 37ம் ஆண்டு பால்குட விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 9ம் தேதி விழா தொடங்கி தினந்தோறும் சுவாமி விதி உலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை காவிரி துலா கட்டத்தில் காப்பு கட்டுதல் தொடங்கி விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி பால்குடம் எடுத்து மேளதாள வாக்கியங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக பால்குட பக்தர்கள் ஊர்வலமாக கோயிலை சென்றடைந்தனர். அதனை தொடர்ந்து சுவாமிக்கு பாலபிஷேகம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Rural Development Department Officers' Association ,Rural Development Department ,Dinakaran ,
× RELATED வாங்கிய பணத்தை திருப்பி தராமல்...