×

சாலை விபத்தில் முதியவர் படுகாயம்

ஸ்பிக்நகர், மே 6:முத்தையாபுரம் கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி(67). தூய்மை பணியாளரான இவர் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த பைக் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் எஸ்ஐ சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post சாலை விபத்தில் முதியவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Spignagar ,Muniyandi ,Krishnanagar ,Muthiyapuram ,Thoothukudi-Tiruchendur road ,
× RELATED தூத்துக்குடியில் ஹேர்டை குடித்து ஆசிரியை தற்கொலை