×

மண் வளத்தை பாதுகாக்க பசுந்தாள் உரம்

 

ஆண்டிபட்டி, மே 6: தேனி மாவட்ட இயற்கை முன்னோடி விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகள் தொடர்ந்து உயர் விளைச்சல் ரகங்களை பயன்படுத்தி சாகுபடி செய்யவேண்டும். பயிர் சுழற்சி முறைகளை கடைபிடிக்காமலும், அதிக ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது.

ஆகையால், மண் வளத்தினை பாதுகாக்க நன்கு முக்கிய தொழு உரம், மண்புழு உரம், பசுந்தாள் உரங்களான சணப்பு, தக்கைப்பூண்டு, பசுந்தழை உரங்களான கொளுஞ்சி, நொச்சி, எருக்கு மற்றும் கிளைரி சிடியா போன்றவற்றை அடி உரமாக கடைசி உழவில் இட்டால் மண்வளம் பாதுகாக்கப்பட்டு பயிர்கள் நன்கு வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கும், என்றனர்.

The post மண் வளத்தை பாதுகாக்க பசுந்தாள் உரம் appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Theni District Natural Pioneer ,Dinakaran ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?