×

திருப்புத்தூர் அருகே மாஸ் காட்டிய மகிபாலன்பட்டி மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 15 பேர் காயம்

 

திருப்புத்தூர், மே 6: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே மகிபாலன்பட்டி பூங்குன்ற நாயகி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த மஞ்சுவிரட்டில் காலையில் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். திருப்புத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் உள்ள ஸ்ரீ பூங்குன்றநாயகி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்த வாடி மஞ்சுவிரட்டு போட்டியில் சிவகங்கை , திருப்புத்தூர், பொன்னமராவதி, கீழச்சீவல்பட்டி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகளும், 50 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் சீறி பாய்ந்த காளைகளை, காளையர்கள் விரட்டி பிடித்தனர்.

தொடர்ந்து வாடிவாசல் வழியாக தொழு மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலில் மகிபாலன்பட்டி, கண்டவராயன்பட்டி கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் வாடிவாசலில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்க முற்பட்டனர். இதில் காளைகள் வீரர்களை தூக்கி வீசி சென்றது. காளைகள் முட்டியதில் 15 காயம் அடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவர் மேல் சிகிச்சைக்காக திருப்புத்தூர் அரசு மருத்துவனைட்டு கொண்டு சென்றனர். காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post திருப்புத்தூர் அருகே மாஸ் காட்டிய மகிபாலன்பட்டி மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 15 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Mahipalanpatti Manjuvirattu ,Tiruputhur ,Mahipalanpatti Poongunra Nayaki Amman Temple Chitrai festival ,Tiruputhur, Sivagangai district ,
× RELATED அதிமுக நோட்டீசுடன் பணம் பட்டுவாடா: முதியவர் சிக்கினார்