×

நிலக்கோட்டை கல்லடிப்பட்டியில் நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்

 

நிலக்கோட்டை, மே 6: நிலக்கோட்டை ஒன்றியம், குல்லக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட கல்லடிப்பட்டி கிராமம் வடக்கு தெருவில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 15வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாத்துரை, ஊராட்சி மன்ற தலைவர் யசோதா தேவராஜ், துணை தலைவர் காளிமுத்து, திமுக ஒன்றிய துணை செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், பெரியசாமி, வார்டு உறுப்பினர்கள் ராமலட்சுமி, ஆரோக்கிய நிர்மலா, ஊராட்சி செயலர் முத்துப்பாண்டி, ஒப்பந்ததாரர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post நிலக்கோட்டை கல்லடிப்பட்டியில் நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Nilakottai Kalladipatti ,Nilakottai ,Union ,Kullakundu Panchayat ,Kalladipatti ,North Street ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி