×

சாலை விபத்தில் வாலிபர் சாவு: நண்பர் சீரியஸ்

அண்ணாநகர்: திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் (30). சலூன் கடை நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (30). இருவரும் நண்பர்கள். கடந்த 2ம்தேதி இரவு திருமங்கலத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, இவர்கள் வீட்டுக்கு பைக்கில் சென்றனர். அப்போது, அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை பார்த்ததும் பைக்கை அதிவேகமாக கமலேஷ் ஓட்டி சென்றனர்.

அப்போது, சென்டர் மீடியனில் பைக் மோதி, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தனர். இதை பார்த்த போலீசார் ஓடி வந்து இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கமலேஷ் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். கிஷோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post சாலை விபத்தில் வாலிபர் சாவு: நண்பர் சீரியஸ் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Kamlesh ,Tirumangalam ,Kishore ,Dinakaran ,
× RELATED அண்ணாநகர் மண்டல பகுதிகளில் கால்வாய்...