×

சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக டிவிட்டர் புகார் மீது உடனடி நடவடிக்கை: போலீசார் அதிரடி

சென்னை: சவுகார்பேட்டை பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுமக்கள் டிவிட்டரில் அளித்த புகார் மீது போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தனர். சென்னையில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால், பலர் வீட்டின் முன் பகுதியிலோ, சாலையிலோ தங்களது வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, சிறிய சந்துகளில், சிறிய சாலைகளில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதால், சாலை மற்றும் தெருக்கள் ஒத்தையடி பாதையாக காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், சவுகார்பேட்டை பகுதியில் வீடுகளின் கீழ், கண்டபடி வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து திலீப் என்பவர் டிவிட்டரில் புகார் செய்திருந்தார். பள்ளிக்கு நடந்து செல்லக்கூட முடியாத அளவு சாலையில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதாக அதில் கூறியிருந்தார். பள்ளி அமைந்துள்ள இப்பகுதியில் இப்படி இருந்தால் எப்படி போக முடியும் என்று கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

உடனடியாக, அந்த புகைப்படத்தில் இருந்த சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் அகற்றிய போலீசார், அதை புகைப்படம் எடுத்து, புகார் அளித்தவரின் டிவிட்டில் பதிவிட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர்.

The post சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக டிவிட்டர் புகார் மீது உடனடி நடவடிக்கை: போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Twitter ,Chennai ,Sawugarpet ,Dinakaran ,
× RELATED சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ...