×

புழல் அருகே ஐடி பெண் ஊழியர் வங்கி கணக்கில் ரூ.16 ஆயிரம் மோசடி

புழல்:ஐடி பெண் ஊழியர் வங்கி கணக்கில் ரூ.16 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர். புழல் அருகே கதிர்வேடு பகுதியை சேர்ந்தவர் பூபாரதி (29). சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

இவர், சமீபத்தில் தனது வங்கி கணக்கை சரி பார்த்தார். அப்போது, 5 தவணைகளாக மொத்தம் ரூ.16,590 திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதுதொடர்பாக வங்கியிலிருந்து எவ்வித குறுஞ்செய்தியும் பூபாரதிக்கு வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், புழல் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணமோசடி செய்த மர்ம நபர்களை குறித்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post புழல் அருகே ஐடி பெண் ஊழியர் வங்கி கணக்கில் ரூ.16 ஆயிரம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Kathirvedu ,Dinakaran ,
× RELATED புழல் அருகே தனியார் குடோனில்...