×

திட்ட ஒருங்கிணைப்பாளரை ஊராட்சி தலைவியின் கணவர் தாக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் பண்டகப்பாடி திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரை ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை வெறியாக தாக்கியதை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுகுமார், மாவட்ட பொருளாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் பண்டகப்பாடி திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரை கொலை வெறியாக தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊராட்சியில் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு வேறு ஊராட்சியில் இருந்து மற்றொரு ஊராட்சியில் பணிபுரிவதால் அடையாள அட்டை வழங்க வேண்டும், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊராட்சி நிதியிலிருந்து பெறும் ஊதியம் ரூ.2500 பெறுவது சிரமமாக உள்ளதால் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாததால் விபத்து காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு செய்து செய்து தர வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் 60 வயது முடிந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும், ஓய்வு பெறும் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஓய்வு பணிபலன் கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post திட்ட ஒருங்கிணைப்பாளரை ஊராட்சி தலைவியின் கணவர் தாக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Perambalur District Vepanthattatta ,Tamil Nadu Government Project Coordinators and People's Welfare Personnel Advancement Association ,Pravaksha ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்