×

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாகுபாடு: பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது புகார்

ஊத்துக்கோட்டை: பென்னாலூர்பேட்டை கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், பாகுபாடு காட்டும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், பூண்டி பிடிஒவிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே பென்னாலூர்பேட்டை கிராமத்தில் சனீஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில், கோயில் நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதை அகற்ற வேண்டும் என புகார் எழுந்துள்ளது. இதனைதொடர்ந்து, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் சர்வேயர் ஆகியோர் நில அளவீடு செய்ததில், அந்த நிலம் கோயிலுக்கு சொந்தமான நிலம் இல்லை எனவும், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 3 நபர்கள் மட்டும்தான் ஒரு வீடு, ஒரு கடை, ஒரு அரசமரம் சிறிய கோயில் என பூண்டி ஒன்றிய சாலைக்குட்பட்ட பகுதி என நில அளவீடு செய்ததில் தெரியவந்துள்ளது.

ஆனால் வருவாய் துறையினர், திட்டமிட்டு பொய்யான அறிக்கையை ஊத்துக்கோட்டை வட்டாட்சியருக்கு, சர்வேயர் மற்றும் வருவாய் ஆய்வாளரும் அறிக்கை கொடுத்துள்ளனர். இதனால், ஆதிதிராவிடர் வசிக்கும், அதே சர்வே எண்ணில் தான் உயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் அந்த நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் போன்ற பல்வேறு கட்டிடங்கள் எழுப்பி வசித்து வருகின்றனர். இதனைதொடர்ந்து வட்டாட்சியரிடம் இருந்து பெற்ற தவறான அறிக்கையை வைத்து, ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மட்டும் அகற்ற வேண்டும் என பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட எல்லாவற்றையும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். சாதிய பாகுபாட்டுடன் செயல்படும் வருவாய் துறையினர் மற்றும் பூண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எழிலரசன், மாவட்ட குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் சுதாகர், நரசிம்மன், இளங்கோவன், மகேந்திரன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழரசு ஆகியோர் நேற்று முன்தினம் பூண்டி பிடிஒவிடம் மனு அளித்துள்ளனர்.

The post ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாகுபாடு: பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Bundi ,District Development Officer ,Uthukkottai ,Poondi ,Regional Development Officer ,Bennalurpet ,Poondi Regional Development Officer ,Dinakaran ,
× RELATED ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்