×

சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தால் ஆடிட்டர்கள் மீதும் சட்ட நடவடிக்கை: ஒன்றிய நிதியமைச்சகம் அதிரடி

புதுடெல்லி: நிறுவனங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தால் ஆடிட்டர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய நிதியமைச்சகம் மே 3ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வாடிக்கையாளர்களின் சட்டவிரோத பணப்பறிமாற்றம் தொடர்பான வழக்குகளில் இனிமேல், அவர்களின் ஆடிட்டர்கள், செலவுக் கணக்காளர்கள், நிறுவனச் செயலாளர்கள் மீதும் பணமோசடி தடுப்புச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நிறுவனங்கள் சார்பில் ஏதேனும் சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பது, வங்கி கணக்குகளை நிர்வகிப்பது ஆகியவை அடங்கும்.

மேலும் வாடிக்கையாளர் பணம், பத்திரங்கள் அல்லது பிற சொத்துக்களை நிர்வகித்தல், நிறுவனங்களின் உருவாக்கம், செயல்பாடு அல்லது அறக்கட்டளைகள், வணிக நிறுவனங்களை வாங்குதல் மற்றும் விற்பது ஆகியவையும் இந்த வகை நடவடிக்கைகளில் இடம் பெறும். எனவே சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டம், 2002 (பிஎம்எல்ஏ)ன் கீழ் அபராதம் மற்றும் வழக்கு நடவடிக்கைகள் இனிமேல் ஆடிட்டர்கள் மீதும் மேற்கொள்ளப்படும். சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் விதியை தங்கள் வாடிக்கையாளர்கள் மீறுவதாக உணர்ந்தால், ஆடிட்டர்கள் அதுபற்றி சில பரிவர்த்தனைகளை அரசுக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தால் ஆடிட்டர்கள் மீதும் சட்ட நடவடிக்கை: ஒன்றிய நிதியமைச்சகம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Union Finance Ministry ,New Delhi ,Dinakaran ,
× RELATED செப்டம்பர் 16 வரை நேரடி வரி ரூ.8.65 லட்சம் கோடியாக உயர்வு