×

ஆசிய இளையோர் தடகளம் 2 பதக்கம் வென்று அபிநயா அசத்தல்

நெல்லை: தாஷ்கன்டில் நடந்த 5வது ஆசிய இளையோர் தடகளப் போட்டியில், தமிழக வீராங்கனை அபிநயா 2 பதக்கங்கள் வென்று அசத்தினார். நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்தவர் அபிநயா (17), வண்ணார்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். உஸ்பெஸ்கிஸ்தான் தலைநகர் தாஷ்கன்டில் நடந்த 5வது ஆசிய இளையோர் தடகளப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற அவர், மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி மற்றும் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். சென்னையில் இருந்து ரயில் மூலம் நேற்று நெல்லை திரும்பிய அபிநயாவுக்கு பள்ளி நிர்வாகம், பயிற்சியாளர் மற்றும் சக மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

The post ஆசிய இளையோர் தடகளம் 2 பதக்கம் வென்று அபிநயா அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Abhinaya ,Asian Youth Athletics ,Nellai ,5th Asian Youth Athletics Championship ,Tashkent, Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஆசிய இளையோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவன் கலெக்டரிடம் வாழ்த்து