×

நத்தாநல்லூர் ஊராட்சியில் பழுதடைந்து பயன்பாடின்றி கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்: நவீன வசதியுடன் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வாலாஜாபாத்: நத்தாநல்லூர் ஊராட்சியில் பயன்பாடின்றி கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து, நவீன வசதியுடன் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் நத்தாநல்லூர் ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, நடுநிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், தபால் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், இ-சேவை மைய கட்டிடம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில், நத்தாநல்லூர் ஊராட்சியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் புளியம்பாக்கம், நத்தாநல்லூர், மதுராநல்லூர் ஆகிய கிராமங்களை சார்ந்த மக்கள் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், பெண்கள் பிரசவ காலங்களில் இங்கு தான் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது, ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் காலப்போக்கில் பழுதடைந்து பயன்படுத்த முடியாத சூழல் நிலவுவதால் இங்கு வரும் செவிலியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாதநிலை நிலவின.இதனையடுத்து, அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தற்போது செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி நவீன ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமாக தரம் உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post நத்தாநல்லூர் ஊராட்சியில் பழுதடைந்து பயன்பாடின்றி கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்: நவீன வசதியுடன் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nathanallur panchayat ,Walajahabad ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி...