
- 1008 யகா கலாசா
- வேல்வி பூஜை
- மேலமருவத்தூர் சித்தர் பீடம்
- பங்காரு ஆதிகாலர்
- மேல்மருவத்தூர்
- சித்ராய் பூர்ணமி திருவிழா
- ஆதிபராஷ்டி சித்தர் பீடம்
மேல்மருவத்தூர்: சித்திரை பௌர்ணமி விழாவையொட்டி, நேற்று ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று முன்தினம் காலை 3:30 மணி அளவில் மங்கல இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பிற்பகல் 12 மணி அளவில் அன்னதானத்தை ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். சித்திரை பௌர்ணமி நாளான நேற்று மாலை 5 மணி அளவில், 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்.
இதில், சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அருள்மொழி ஐஏஎஸ், ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஜெயந்த், ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், தலைமை செயல் அதிகாரி அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்பாக, ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 83 எண் வடிவில் சக்கரம் அமைத்து அதில் 4 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. கருவறை முன்பாக பஞ்சபூத சக்கரம் அமைத்து ஐந்து தலை நாகம் படம் எடுக்க அதனுள் கலசம் நிறுவப்பட்டு ஐந்து யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தஞ்சை மாவட்ட தலைவர் வாசன், இணை செயலாளர் ராஜேந்திரன், உள்ளிட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர்கள் தொண்டர்கள் செய்திருந்தனர்.
The post மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் 1008 யாக கலச வேள்வி பூஜை: பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.