×

மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக நகர பேருந்துகளின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக புதிய பேருந்துகளை வாங்கி நகரப்பேருந்துகளின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகங்கள் மக்களுக்காக இயங்கி வரும் ஒரு சேவைத் துறை. நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடுகட்ட அரசு நிதியை வழங்க வேண்டும். அதிமுக ஆட்சிக் காலங்களில் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியாக பல கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு துறைகளின் மூலம் வருமானம் வரும் நிலையில், அரசு பேருந்து துறை நஷ்டத்தில் நடப்பதாகக் காரணம் காட்டி, கிராமப்புற பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் இதுவரை ஒரு புதிய பேருந்துகளை கூட அரசு வாங்கவில்லை. கடந்த 3ம் தேதியன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளிப்படையாகவே, மகளிரின் இலவச பயணத்தால் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, தமிழகத்தில்பெரும்பாலான கிராமப் புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன என்று தெரிவித்தார். எனவே, உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கி, மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக நகரப் பேருந்துகளின் செயல்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

The post மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக நகர பேருந்துகளின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,general secretary ,Edappadi ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்