×

ரூ.538 கோடி வங்கி மோசடி ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் வீட்டில் சிபிஐ ரெய்டு

புதுடெல்லி: கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் மும்பையில் உள்ள ஜெட் ஏர்வேஸ் மற்றும் அதன் நிறுவனர் நரேஷ் கோயல் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. புகார் அடிப்படையில் ஜெட் ஏர்வேஸ் மற்றும் அதன் நிறுவனர் நரேஷ் கோயல் வீடு உள்பட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நரேஷ்கோயல், அவரது மனைவி அனிதா, முன்னாள் விமான நிறுவன இயக்குநர் கவுரங் ஆனந்த ஷெட்டி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ரூ.538 கோடி வங்கி மோசடி ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் வீட்டில் சிபிஐ ரெய்டு appeared first on Dinakaran.

Tags : CBI ,JetAirways ,New Delhi ,Mumbai ,Jet Airways ,Canara Bank ,
× RELATED மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமீன் வழக்கு தள்ளுபடி