×

300 கிமீ பைக் வேகம் யூடியூபர் நசுங்கி பலி

அலிகார்: யூடியூபில் லைக்ஸ்களை அள்ள நினைத்து 300 கிமீ வேகத்தில் செல்ல விரும்பிய யூடியூபர் பரிதாபமாக பலியானார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனை சேர்ந்தவர் அகஸ்தய் சவுகான். இவர் ‘ப்ரோ ரைடர் 1000’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். தனது யூடியூப் சேனலில் அதிக லைக்ஸ்களை பெற நினைத்து 300 கிமீ வேகத்தில் பைக் ஓட்ட விரும்பினார். இதற்காக யமுனா விரைவுச் சாலையில் அகஸ்தய் சவுகான் ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் – 1,000சிசி சூப்பர் பைக்கை ஓட்டிக்கொண்டு தனது யூடியூப் சேனலுக்காக வீடியோ ஒன்றை தயாரித்துக்கொண்டு வந்து கொண்டு இருந்தார். அப்போது அகஸ்தய் ஓட்டி வந்த சூப்பர் பைக் கட்டுப்பாட்டை இழந்து யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் உள்ள டிவைடரில் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவர் அணிந்திருந்த ஹெல்மெட் பல துண்டுகளாக உடைந்தது. தலையில் பலத்த காயம் காரணமாக அகஸ்தய் பலியானார்.

The post 300 கிமீ பைக் வேகம் யூடியூபர் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : Aligarh ,YouTube ,Uttarakhand… ,Nasungi Bali ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!