
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் ஆண்டுக்கான விண்ணப்ப பதிவு வரும் 8ம் தேதி தொடங்க உள்ளது என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2023-24ம் ஆண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வரும் 8ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு முடிந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 22ம் தேதி முதல் துவங்க உள்ளது.
விண்ணப்ப பதிவு துவக்க நாள் 8.5.2023
விண்ணப்ப பதிவு இறுதி நாள் 19.5.2023
தரவரிசை பட்டியல் வெளியீடு 23.5.2023
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 25.5.2023 – 29.5.2023
பொது பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு 30.5.2023 – 9.6.2023
பொது பிரிவினருக்கான 2ம் கட்ட கலந்தாய்வு 12.6.2023 – 20.6.2023
The post அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் ஆண்டு விண்ணப்ப பதிவு வரும் 8ம் தேதி தொடக்கம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.