×

விஏஓ கொலை இருவருக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில், கடந்த 25ம் தேதி விஏஓ லூர்து பிரான்சிஸ் சேவியர் (55) அவரது அலுவலகத்திற்குள் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு(41), மாரிமுத்து(31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை போலீசார், பாளை. மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.

The post விஏஓ கொலை இருவருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : VAO ,Tuticorin ,Lourdes Francis Xavier ,Murappanath, Tuticorin district ,
× RELATED காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்...