×

முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.76 கோடியில் பண்ணூர்-மப்பேடு இருவழி சாலையை 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி: தலைமை பொறியாளர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் உட்கோட்டம் மேற்கு பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாஜாபாத்-சுங்குவார்சத்திரம்- கீழச்சேரி மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தமிழ்நாடு முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.76 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது பன்னூர் முதல் மப்பேடு வரை 9.2 கி.மீ. தூரத்திற்கு இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணியின் காரணமாக சென்னையில் இருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு எளிதில் வாகனங்களில் செல்ல முடியும். நேரமும் மிச்சமாகும். தற்போது சுங்குவார்சத்திரத்தில் இருந்து மப்பேடு வரை இரு வழி சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதால் நீண்ட தூரம் சுற்றிவராமல் சுங்குவார்சத்திரத்தில் இருந்து மப்பேடு வந்து அங்கிருந்து திருவள்ளூர் வழியாக சென்னைக்கோ, ஆந்திராவுக்கோ செல்வதால் செல்லக்கூடிய தூரம் குறைவதோடு நேரமும் மிச்சமாகும்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், பண்ணூர் முதல் மப்பேடு வரை நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆர்.சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் பி.செந்தில் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மேலும் இரு வழி சாலையை அகலப்படுத்துவதற்காக அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளையும் தலைமை பொறியாளர் ஆர்.சந்திரசேகர் நடவு செய்தார். அப்போது நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் ஏ.எஸ்.விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர் எஸ்.ஜெ.தஸ்நேவிஸ் பெர்னான்டோ, உதவி பொறியாளர் பிரவீன் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.76 கோடியில் பண்ணூர்-மப்பேடு இருவழி சாலையை 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி: தலைமை பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pannur-Mapapedu ,Thiruvallur ,Tiruvallur ,Utgotham ,West Division of Walajabad ,TU- ,Dulacheri State Highway ,Tamil Nadu ,CM ,Pannur-Mappede ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம்...