×

சட்டசபை தேர்தல் கூட்டணி திமுக, காங். தலைமை முடிவு செய்யும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

மீனம்பாக்கம்: திமுகவுடன் கூட்டணி நீடிக்கிறது. சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி திமுக, காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, டெல்லியில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி மாநிலத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் அதை  தெளிவுப்படுத்தியுள்ளார். சட்டசபை தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து பேசி கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள். புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தமட்டிலும் கூட்டணி பற்றி முடிவு செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை. அதுபற்றி இரு கட்சிகளின் தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்….

The post சட்டசபை தேர்தல் கூட்டணி திமுக, காங். தலைமை முடிவு செய்யும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Assembly Election Alliance Thisagam ,Cong. ,Puducherry ,Chief Minister ,Narayanasamy ,Fisheramakkam ,Congress ,Assembly Election Alliance Kazhagam ,
× RELATED புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சரக்கு வாகன டிரைவர்கள்