×

வயிற்றில் வளர்ந்து வரும் 34 வார கருவின் மூளையில் உள்ள குறைபாட்டை போக்கி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை..!!

அமெரிக்கா: உலகிலேயே முதல்முறையாக வயிற்றில் வளர்ந்து வரும் கருவின் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அமெரிக்க மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். மனித உடலில் மிகவும் நுணுக்கமானதும் அறியப்படாத எண்ணற்ற மர்மங்களை பொதிந்து வைத்துள்ளது மூளை. கோடிக்கணக்கான மெல்லிய நியூரான்களான மூளை தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மூளை அறுவை சிகிச்சை என்பது மருத்துவத்துறையில் மிக முக்கியமானதாகவே அறியப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவ துறையின் மற்றம் ஒரு மைல் கல் சாதனையை நிகழ்த்தியுள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள் வயிற்றில் வளர்ந்து வரும் கருவின் மூளையில் உள்ள ரத்த நாளத்தில் உள்ள குறைபாட்டை அறுவை சிகிச்சை மூலம் காத்துள்ளனர். கருப்பையில் இருக்கும் 34 வார கருவின் மூளையில் அல்ட்ரா சவுண்ட் உதவியோடு சிறிய ஊசி மற்றும் காயின் எனப்படும் சுருளைக்கொண்டு இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை திறம்பட செய்து சந்தித்துள்ளனர்.

கேலன் வால்பெர்மேஷன் எனப்படும் இந்த அரியவகை குறைபாடு என்பது மூளையில் இருந்து இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்தநாளம் முழுமையான வளர்ச்சியை எட்டாமல் இருப்பதாகும். இந்த குறைபாட்டின் காரணமாக ரத்தநாளத்தில் அதிகப்படியான ரத்தத்தின் அழுத்தத்தால் ரத்தநாளமும், இதயமும் பாதிப்பிற்குள்ளாகும். அதன் தொடர்ச்சியாக உடல் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த பாதிப்புகளை கொண்டு பிறகும் குழந்தை மிக பெரிய அளவில் மூளை பாதிப்புகளையும் உடனடியாக இதய செயலிழப்பாலும் உயிரிழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

The post வயிற்றில் வளர்ந்து வரும் 34 வார கருவின் மூளையில் உள்ள குறைபாட்டை போக்கி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை..!! appeared first on Dinakaran.

Tags : USA ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!