×

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு!: பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!!

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிபத்மன், ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹரிபத்மன் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது.

ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு சம்பவம் நடந்ததாக கூறி 4 ஆண்டுகளுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஹரிபத்மன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 162 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கூறிய காவல்துறை, இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய வேண்டியுள்ளதால் ஹரிபத்மனுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. இதையடுத்து ஜாமின் மனு மீதான விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி இடைக்கால ஜாமின் கோரிய ஹரிபத்மன் கோரிக்கையையும் நிராகரித்தார்.

The post கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு!: பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : High Court ,Haribatman ,Chennai ,Hari Badman ,Khalashetra College ,Assistant ,Court ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...