×

கேரளாவில் தீவிரவாதம் எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதை `தி கேரளா ஸ்டோரி வெளிச்சம்போட்டு காட்டுகிறது: பிரதமர் மோடி கருத்து..!!

கர்நாடகா: `தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார். மதமாற்றம் அடைந்த கேரள பெண்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்வது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களை இஸ்லாம் மதத்துடன் இணைத்து ‘‘தி கேரளா ஸ்டோரி” என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் அதாவது மே.5ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

மேலும் முன்னதாக அதன் ட்ரெய்லர் வெளியாகி பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் சங்பரிவார் அமைப்புகளால் குறிப்பிட்ட மதத்தினரை இலக்காக வைத்து வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பொய் பிரச்சாரம் செய்யும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், கேரள மாநிலத்தை அவமானப்படுத்தும் நோக்கிலும் படம் உருவாக்கப்பட்டு இருப்பதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இதனிடையே சர்ச்சைக்குள்ளான தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், படத்திற்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கர்நாடக தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் நரேந்திரமோடி `தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்தார். `தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரள சமூகத்தை தீவிரவாதம் எப்படி சிதைக்கிறது என்பதை காட்டுகிறது.

கேரளாவில் தீவிரவாதம் எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதை `தி கேரளா ஸ்டோரி வெளிச்சம்போட்டு காட்டுகிறது. இப்படத்தை தடைசெய்ய முயற்சிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் சக்திகளுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கிறது. `தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தான் தடை செய்ய வேண்டும் ஏன் காங்கிரஸ்கட்சி போராடி வருகிறது என்றார்.

The post கேரளாவில் தீவிரவாதம் எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதை `தி கேரளா ஸ்டோரி வெளிச்சம்போட்டு காட்டுகிறது: பிரதமர் மோடி கருத்து..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Karnataka ,Narendra Modi ,ISIS ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி