×

எம்ஜி காமெட் எலக்ட்ரிக் கார்

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், எம்ஜி காமெட் இவி என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள மோட்டார், அதிகபட்சமாக 42 பிஎஸ் பவரையும், 110 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 17.3 கிலோவாட் அவர் லி்த்தியம் அயன் பேட்டரி உள்ளது. ஒரு முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 230 கி.மீ தூரம் வரை செல்லும் என, அராய் சான்று அளித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இருப்பினும், தினசரி பயன்பாட்டில் 170 கி.மீ முதல் 180 கி.மீ தூரம் வரை ரூ.ல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1,000 கி.மீ தூரம் வரை செல்வதற்கு சார்ஜ் செய்ய வேண்டிய எலக்ட்ரிக் பயன்பாட்டை கணக்கிடும்போது, ரூ.519 செலவாகும் என எம்ஜி நிறுவனம் தெரிவிக்கிறது. இதுதவிர, 10.25 அங்குல முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மல்டி பங்ஷன் ஸ்டியரிங் வீல், முன்புறம் பவர் விண்டோக்கள், கீலெஸ் என்ட்ரி, 12 வோல்ட் வெளிப்படுத்தும் 3 யுஎஸ்பி அதிவேக சார்ஜிங் போர்ட்கள், 55 அம்சங்களுடன் கூடிய ஐ-ஸ்மார்ட் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

அறிமுகச் சலுகை விலையாக சுமார் ரூ.7.98 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள எலக்ட்ரிக் கார்களில் மலிவு விலை எலக்ட்ரிக் காராக இது உள்ளது. உதாரணமாக, டாடா டிகோ இவி ஷோரூம் துவக்க விலை சுமார் ரூ.8.69 லட்சம் எனவும், டாப் வேரியண்ட் ரூ.11.99 லட்சம் வரை உள்ளது. இதுபோல், சிட்ரான் இ-சி3 ஷோரூம் விலை துவக்க வேரியண்ட் சுமார் ரூ.11.5 லட்சமாகவும், டாப் வேரியண்ட் சுமார் ரூ.12.43 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post எம்ஜி காமெட் எலக்ட்ரிக் கார் appeared first on Dinakaran.

Tags : MG Comet ,MG Motor India ,
× RELATED “வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்”.....