×

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்..!!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சார்பு நிலைப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய புதிய தேர்வு வாரியம் அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசுப் பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச் செய்யும் இந்த கருத்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. புதிய தேர்வு வாரியம் அமைப்பது பற்றி முடிவு எடுக்க சென்னையில் 8-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாகவும் தெரிகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டிய தேவை தற்போது எழவில்லை.

அரசின் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ஆண்டுக்கு 500க்கும் குறைவானோரை மட்டுமே தேர்வாணையம் தேர்ந்தெடுக்கும். டி.என்.பி.எஸ்.சி என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை தேர்வு செய்வதாக இருந்து, பணிச்சுமை இருந்தால் இன்னொரு அமைப்பை உருவாக்குவது, அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு 6,000 முதல் 7,000 பேரை மட்டுமே தேர்வு செய்கிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனைத்து வகையான ஐயங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தற்போது இருப்பதை போலவே தனித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Public Service Commission ,Bamaga ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Ramdas ,Tamil Nadu Government Staff Selection Commission ,Dinakaran ,
× RELATED துணை கலெக்டர், டிஎஸ்பி பதவி குரூப் 1...