×

புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி) இரண்டாக பிரிக்கவும், சார்புநிலைப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன் டி.என்.பி.எஸ்.சி. செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

The post புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,Ramadoss ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல்...