×

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் நீக்கம்; 386 அவதூறு வீடியோக்களை முடக்க யூடியூப் நிர்வாகத்துக்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம்..!!

சென்னை: 386 அவதூறு வீடியோக்களை முடக்க யூடியூப் நிர்வாகத்துக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளது. தமிழக சைபர் கிரைம் பிரிவு தொடர்ந்து சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்காக அதிகாரிகளை நியமித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. குறிப்பாக அவதூறு பரப்பும் வகையில் போலியான முகவரி, போலியான இணையதளங்கள் மற்றும் வன்முறையை தூண்டும் விதமான வீடியோக்கள் உள்ளிட்டவை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்படுகிறதா? என கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், யூடியூப் தளங்களில் 40 சட்டவிரோத பதிவுகள், வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், உயரதிகாரிகள் குறித்து அவதூறாக பேசி வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை முடக்கக் கோரி யூடியூப் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் பொதுமக்களை தொடர்ந்து தற்கொலை செய்ய தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் 221 சட்டவிரோத கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்.பி.ஐ. அனுமதி பெறாத மேலும் 61 கடன் செயலிகளை நீக்க கூகுள் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

The post கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் நீக்கம்; 386 அவதூறு வீடியோக்களை முடக்க யூடியூப் நிர்வாகத்துக்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : YouTube ,Chennai ,Chennai Cybercrime Police ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!