×

என்எஸ் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

 

தேனி, மே 5: தேனி நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியின் 18ம் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் குணசேகரன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பியுலாராஜினி ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில், அப்துல்கலாம் விஷன் 2020 அமைப்பின் தலைவர் திருச்செந்தூரான் கலந்து கொண்டு ஆசிரியர்களின் சிறப்புகளை பேசினார்.

கல்லூரி இணை செயரலாளர் மணிமாறன் வாழ்த்தி பேசினார். மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற ஆசிரிய மாணவி ரோஷிபா, இரண்டாம் இடம் பெற்ற ஆசிரிய மாணவி சுவேதா, மூன்றாம் இடம் பெற்ற சவுந்தர்யா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. கல்லூரியின் பெஸ்ட் அவுட்கோயிங் மாணவியாக திவ்யா தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு கேடயம் வழங்கப்பட்டது.நுண்கலைகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பிஎட் மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. உதவி பேராசிரியர் ஜீவிதா நன்றி கூறினார்.

The post என்எஸ் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : NS College of Education ,Theni ,Nadar Saraswathi College of Education ,Theni Melappetta ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்