×

ரூ.9 கோடி மதிப்பீட்டில் காணக்கிளியநல்லூர் நந்தியாற்றில் தடுப்பணை அமைக்கும் பணி

லால்குடி மே 5: லால்குடி அருகே காணக்கிளியநல்லூர் நந்தியாற்றில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியத்தில் மழை காலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் காணக்கிளியநல்லூரில் உள்ள நந்தியாற்றில் வரும் தண்ணீரை தடுத்து கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரத்திற்கும் விவசாயத்திற்கும் பயன்தரும் வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும் என பகுதி கிராமமக்கள் அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காணக்கிளியநல்லூர் நந்தியாற்றில் தட்டுப்பணை அமைக்க ரூ.9 கோடியே 23 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டமிட்டு செயல் வடிவமாக கொண்டு தட்டுப்பணை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு, காணக்கிளியநல்லூர் நந்தியாறில் தடுப்பணை கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆலோசனை வழங்கி விரைவில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது நடுக்காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் சுப்ரமணியன் மற்றும் செயற்பொறியாளர் நித்தியானந்தம் உதவி செயற்பொறியாளர் ஜோதி,
உதவி பொறியாளர் முருகேசன், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், காணக்கிளியநல்லூர் தமிழ்செல்வன், லால்குடி தாசில்தார் விக்னேஷ் உடன் இருந்தனர்.

The post ரூ.9 கோடி மதிப்பீட்டில் காணக்கிளியநல்லூர் நந்தியாற்றில் தடுப்பணை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Kanakkalianallur Nandiyar ,Lalgudi ,Minister ,K.N. Nehru ,Dinakaran ,
× RELATED லால்குடியில் அஸ்வின்ஸ் புதிய கிளை திறப்பு